பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.