follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஆசிரியர் தினத்தில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்

ஆசிரியர் தினத்தில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்

Published on

இலங்கையில் ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகின்றது.

இன்று(06) 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம், ஆசிரியர் அதிபர்களின் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டம் 87 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) அதிபர்களும் போராட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதேவேளை புதிய...

இலங்கையர்கள் ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள்...