எதிர்வரும் தேர்தலில் பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் சென்று வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடல் ஊனம் காரணமாக நடந்து அல்லது பொது போக்குவரத்து மூலம் வாக்குச்சாவடிக்கு செல்லவோ அல்லது வரவோ முடியாவிட்டால், சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.