உலகிலேயே மிக பெரிய கொள்கலன் கப்பலான EVER GREEN − EVER ACE கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த கப்பலில் 23,993 கொள்கலன்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.
இதேவேளை, தெற்காசியாவில் இந்த கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது விசேட அம்சமாகும்.