தேர்தல் நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான விதானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (31) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்காக அரச நிறுவனங்களின் அதிகாரிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, ஊடக அளவுருக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.