மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
பேக்கரித் தொழிலுக்குத் தேவையான மா, முட்டை மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.