பல்கலைக்கழக மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று(30) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த மாணவியின் திடீர் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணை, கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று(30) நடைபெற்ற போது மாணவியின் தந்தை சாட்சியமளித்தார்.
24 வயதான குறித்த மாணவி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் வைத்து கடந்த 17ஆம் திகதி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.