இலங்கையின் திவால் ஸ்டிக்கர் விரைவில் நீங்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சில பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் அவை அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக உழைத்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த போதெல்லாம், நாடு முன்னோக்கி நகர்ந்ததாகவும், ஏனைய அரசியல் குழுக்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களை தோற்கடித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களுக்காக நின்றதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கரந்தெனிய மற்றும் பலபிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.