கடமை, ஒழுக்காற்று அல்லது நிதிக் குற்றங்களை நிரூபிக்காமல் தமக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர்களின் மனுவில் கையொப்பமிட்ட மாத்திரம் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் இலக்குகளுக்காக தாம் தொடர்ச்சியாக வக்காலத்து வாங்குவது ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிராக முன்னெடுக்கும் மக்கள் சார்பான போராட்டத்தை பொறுப்பு அமைச்சரோ அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்களோ தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
தனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால், அந்தக் காலப்பகுதியில் தனது கடமைகளை சரியாகவும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவேன் என நம்புவதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.