உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்பதால், வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிய வந்தது.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவிக்கையில்;
“..கிராம மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இதேபோன்றதொரு நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகவும், அதற்கேற்ப, தேர்தலுக்குச் செல்லாமல் இருப்பதே சிறந்த நடவடிக்கை எனவும், ஆனால் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான நேரடி நடைமுறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
மக்கள் முன்னோக்கி செல்வதில் ஐ.தே.கட்சிக்கு பிரச்சினை இல்லை, ஆனால் அரசாங்க அதிகாரத்தை நாடி சிக்கலான பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் குழுவாக பொஹொட்டுவ இவ்வாறானதொரு பிரச்சினையை எதிர்நோக்குவதாக நினைக்கலாம்..”