follow the truth

follow the truth

March, 17, 2025
Homeஉள்நாடு"தேர்தல் நடத்தப்படமாட்டாது" - குமார வெல்கம

“தேர்தல் நடத்தப்படமாட்டாது” – குமார வெல்கம

Published on

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம;

“.. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட தலைவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியதை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் நடத்தாது என்பது உறுதியாகி விட்டது.

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என காண்பிக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கு மக்களாணை கிடையாது. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் ஏதாவதொரு வழிமுறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போடும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் என மக்கள் மத்தியில் குறிப்பிடும் அரசாங்கம் தேர்தலை பிற்போட திரைமறைவில் இருந்துக் கொண்டு அரசியல் சூழ்ச்சி செய்கிறது. தேர்தலை பிற்போடலாம். ஆனால் மக்களின் அரசியல் தீர்மானத்தை பிற்போட முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை பெற்றுக்கொண்டு அரசாங்கம் கோடி கணக்கில் கடினமில்லாமல் சம்பாதித்துள்ளது. கட்டுப்பணத்தை எதிர்வரும் ஆறு அல்லது ஒரு வருடத்திற்கு தாராளமாக பயன்படுத்தலாம். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...