follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடு'சுதந்திரம்' ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்தது

‘சுதந்திரம்’ ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்தது

Published on

“சுதந்திரம்” கிடைத்தவுடன் அது ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

“சுதந்திரம் கிடைத்தவுடன் அது ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்தது. சிறுபான்மையினராக இருந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்தனர். ஆனால் தாங்கள் உண்மையில் விடுதலை பெறவில்லை என்பதை இப்போது அவர்களும் உணர்ந்துள்ளனர்”

75வது தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு கூறுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

“சுதந்திரம் கிடைத்த உடனேயே ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மை அமைப்பாக மாற்றப்பட்டது. அதனால் தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்ததாக நினைத்தனர். எனினும், தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர். எனவேதான் பெப்ரவரி 4ஆம் திகதி 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாடிய போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். அதனால்தான் இதை கொண்டாடும் போது கறுப்பு நாளாக அறிவித்து, நாட்டின் சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான இயக்கத்தைத் தொடங்குகிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அருகம்பேவுக்கு செல்ல வேண்டாம் : பிரித்தானியாவும் அறிவிப்பு

அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது. அருகம்பே பகுதியில்...

யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு...

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500...