சீனாவில் இருந்து 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக ரயில் தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனரமைப்பு இடம்பெறும் போது ரயில் பாதைகள் மூடப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களை இறக்குமதிசெய்ய ஒரு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.