சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண நிதி கிடைத்தால் மாத்திரமே நாட்டின் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணம் அச்சிடுவதை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பரிஸ் கிளப், இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து நல்ல பதில்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.