மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மின்விநியோகத்தடை ஏற்பட்டது.
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, செயற்பாடுகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.