இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளுக்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்கவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மருந்துகளை கொள்வனவு செய்வதில் பல முறைகேடுகள், ஊழல்கள் இடம்பெறுகின்றன என்றுஅரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிடம் இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நோயாளிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்பதை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.