கிழக்கு ஜெரூசலேமில் வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு ஜெரூசலேமில் உள்ள யூதகுடியேற்றவாசிகள் யூதவழிபாட்டுத்தலத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வெளியேறும் தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வெள்ளை காரை அதிகாரிகள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.