ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த தேர்தலைப் போன்று இந்த வருடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள கட்சி தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதாகவும், அந்த வெற்றியைப் போன்றதொரு வெற்றியை இம்முறையும் பெறுவோம் என நம்புவதாகவும் அவர் கூறினார்.