வர்த்தகர் திலித் ஜயவீரவுடன் இராஜ் வீரரத்ன யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக நடத்திய நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.
‘GOTA GO HOME’ ஹேஷ்டேக் ராஜபக்சவின் மகனால் உருவாக்கப்பட்டது என்று திலித் கூறியது சமீபத்தில் நாடாளுமன்ற லொபியிலும் பேசப்பட்டது.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாமல் ராஜபக்ச அங்கு வர,
“மிஸ்டர் நமல், நீங்கள் ‘GOTA GO HOME’ என்ற டேக் லைனை உருவாக்கினீர்களா? இதை ராஜபக்சவின் மகன் செய்ததாக இப்போது கதைக்கப்படுகின்றது..” என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
“இல்லை… இல்லை… இது என் கான்செப்ட் இல்லை, இது டாக்டர் பெதும் கரன் இனது வேலை. ஐந்து அல்லது பத்து லட்சங்கள் உள்ள பக்கங்களை பணத்திற்காக எடுத்து வைரலாக்கினார்.. இதற்குத் தேவையான பணம் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கோட்டா சாச்சாவை துரத்தியதில் மூளையாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, கோட்டா சாச்சாதான். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தனியாக அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கோட்டா சாச்சாவுக்கு அப்போது பெரும் ஆசை இருந்தது. இறுதியில், அவரது பணி அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது,” என நாமல் மேலும் தெரிவித்தார்.