தியவன்னா ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ பகுதியை சேர்ந்த எஸ்.சயுர ஹிம்ஹான என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்னாஓயா பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பதுடன், அதில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவரில், ஒருவரே நேற்று (26) காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.