பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அங்கீகாரத்துக்கு உட்பட்டு இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை பொலிஸ் மா அதிபர் செய்துள்ளார்.