ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கடந்த 24ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.