பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் மூவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
இலங்கை பரிவர்த்தனை மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய போது, ஆணைக்குழுவின் நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை “தாருண்யட ஹெடக்” அமைப்பிற்கு வழங்கி அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது..