அடுத்த சில வருடங்களில் மருந்து உற்பத்தியை 50% ஆக அதிகரிப்பதில் இலங்கை கவனம் செலுத்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மருந்து உற்பத்தி 15 – 20 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. நாட்டுக்குத் தேவையான மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தி இந்த நாட்டில் மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
உபகரணங்களை இறக்குமதி செய்வதில் வரிச் சலுகையில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் புதிய திட்டத்திற்காக 12 முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளுக்காக முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.