நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி அழைக்கப்படும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளது.