குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 பெண்கள் இன்று(25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்களை விரைவில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.