சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித ஆகியோரை பார்வையிடும் முகமாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(24) வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மின்சார நுகர்வோர்களுக்காக குறித்த இருவரும் துணிச்சலாக முன் நின்றார்கள் எனவும், அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக மேற்கொள்ள முடியுமான சகல சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்புகளுக்காக அவர்கள் முன்நிற்கவில்லை எனவும், இந்நாட்டின் சாதாரண மக்களுக்காகவே அவர்கள் முன்நின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.