க.பொ.த. உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு இடம்பெறுவதை தடுக்க தவறியமை தொடர்பில் நாளை (25) விளக்கமளிக்குமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையான காலத்தில் மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 23 ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தது.
ஆனால் இரு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நாளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இரு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.