ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின் பாவனையாளர்கள் சங்கம், அதன் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இந்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்களின் பிரதிவாதிகளாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், இலங்கை மின்சார சபை, அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.