உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வரலாற்று சிறப்புமிக்க திகதியை தெரிவு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
“75 ஆண்டுகளாக இந்த நாட்டை நெருக்கடிக்கு இட்டுச் சென்ற தீய ஆட்சியை, ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தெரிவு செய்யப்பட்ட திகதியும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். 9வது நாள். இந்த தீய ஆட்சியாளர்களுக்கு 9 ஆம் திகதி மிகவும் சாதகமற்ற மற்றும் துரதிர்ஷ்டவசமான நாள். ஆனால் 9 ஆம் திகதி இந்த நாட்டின் குடிமக்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். ஜனரஞ்சக, சுயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுவுவதற்கான பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் நாள் மார்ச் 9…”