அடுத்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டவுடன் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மாத்திரம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிகாரி, இது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆரம்பத்திலிருந்தே சாதகமான கருத்தை கொண்டிருந்தாலும், நல்லாட்சியின் காலத்திலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் தலையீட்டினால் இதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அலுவலக அதிகாரி, எதிர்வரும் மாகாண சபைகள் சட்ட வரைவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.