ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த இருவரையும் இன்று(24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.