பாண் விற்பனை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளமை காரணமாக எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது ஒரு இறாத்தல் பாண் 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் பாண் வாங்குவது குறைவடைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.