துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று(23) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக முதலாம் குறுக்குத் தெரு மற்றும் என்.எச்.எம். அப்துல் காதர் மாவத்தை முற்றாகத் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.