உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தகவல்களை விரைவில் தமது மாவட்டத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த சனிக்கிழமை தேர்தல் செலவுக் கட்டுப்பாட்டு சட்டத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.