உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த வருட மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் (Ardem Patapoutian) ஆகியோர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.
வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.