பல சட்டத்தரணிகளுக்கு எதிராக கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்தமை தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் சட்டப் பிரிவினருக்கோ தெரியாமல் இந்த பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.