பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரேஸில் கால்பந்தாட்ட அணி வீரர் டேனி அல்வேஸ், ஸ்பானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி தன்னை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், ஸ்பெய்னின் கெட்டலோனியா பிராந்திய பொலிஸார் இன்று காலை டேனி அல்வேஸை கைது செய்தனர்.
ஸ்பெய்னின் பார்சிலோனா கழகத்துக்காக முன்னர் விளையாடிய டேனி அல்வேஸ், கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டியிலும் பங்குபற்றினார்.