ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் கையாண்ட விதம் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்ட ஒரு வேட்பாளரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.