அரசியல் கடும்போக்காளர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க அமைச்சர்களின் கருத்துக்களில் இருந்து இது புலனாகிறது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
புனர்வாழ்வுச் சட்டத்தின் முழு வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் அவ்வாறான தீர்மானம் பெறப்படவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.