புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து நியதிச்சட்ட நிறுவனங்கள் சில தொடர்பான பாராளுமன்ற அமைச்சுசார் அலுவல்கள் பற்றிய குழுக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஆண்டறிக்கைகள் தொடர்பான 22 பிரேரணைகள் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளன.