இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டிய 108 பில்லியன் ரூபாவை வழங்கவில்லையாயின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் தற்போது பெற்றுக்கொள்ளும் எரி எண்ணெய், நெப்டாவிற்கான கட்டணத்தையேனும் செலுத்த முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் என மின்சார சபை அறிவித்துள்ளதன் பின்புலத்திலேயே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு வழங்கிய கடனை கோரி நிற்கின்றது.
ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை இடைக்கால மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை கடந்த வாரம் அறிவித்திருந்தாலும் அந்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.