follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP2கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தம்

கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தம்

Published on

கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எமது வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாது என்பதையும், அந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால், இந்த நேரத்தில், நாங்கள் கடன்களைப் பெற முடியாது.

பணத்தை அச்சிடவும் முடியாது. பணத்தினை அச்சிட போனால் எதிர்காலத்தில் கடன் கிடைக்காது. ஒரு கொள்கையாக, பணம் செலுத்தாததற்காக பணம் அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டது. இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம்.

டிசம்பர் மாதம் எவ்வாறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த புள்ளிவிபரங்களை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி, இலங்கை திறைசேரிக்கு 141 பில்லியன் வரி மற்றும் வரி அல்லாத படிவங்களைப் பெற்றுள்ளது. சம்பளம் வழங்க 88 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்காக 30 பில்லியன். உரங்களைப் பெற 6.5 பில்லியன். சுகாதார அமைச்சிற்கு தேவையான மருந்துகளுக்கு 8.7 பில்லியன். மற்ற தினசரி பயணச் செலவுகள் போன்ற நிர்வாகச் செலவுகள் 154 பில்லியன். அப்படியென்றால் 141ல் 154ஐ எப்படிப் பெறுவது? மாற்று வழி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை நிர்வகிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை...

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு...

‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது...