இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் முடிவில் நேற்று (15) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சந்தித்த பாரிய தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் சங்கம் தேசிய அணியின் முகாமையாளருக்கு அறிவித்துள்ளது.
மேலும், இந்த அறிக்கையை தயாரிப்பதில், அணித் தலைவர், தலைமைப் பயிற்சியாளர், தேர்வுக் குழு மற்றும் அணி மேலாளர் ஆகியோரின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், 5 நாட்களுக்குள் ‘அறிக்கையை’ சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணி மேலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 390/5 ஓட்டங்களைப் பெற, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையால் 73 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இதன்படி, இலங்கை அணி 317 ஓட்டங்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் அணியொன்று இழந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.