உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க உள்ளார்.
நாளை (17) முதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் அவர் இதனைக் கூறுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.