follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுதோட்ட வீடுகள் வரிசையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

தோட்ட வீடுகள் வரிசையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

Published on

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தின் மிட்லண்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளின் வரிசையில் நேற்று (15) இரவு தீ பரவியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 8.30 மணியளவில் வீடொன்றில் ஆரம்பித்த தீ ஏனைய வீடுகளுக்கும் பரவியதுடன், 10 தோட்ட வீடுகளில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தீயினால் இடம்பெயர்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் பெருந்தொகையானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தலவாக்கலை பொலிஸாருடன் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த குழந்தைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் அதே தோட்டத்தில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில் விளக்கமறியல் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,