follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉலகம்சுமார் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து

சுமார் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து

Published on

நேபாளத்தில் உள்ள Pokhara சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

நேபாளத்தின் பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழப்பு

காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட...

இன்று பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர். ஒரு...

ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் ஈரான்

உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க AI மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும்...