பிரிட்டனில் பெட்ரோல் நிலையங்களுக்குப் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விநியோகம் செய்யும் கனரக வாகன சாரதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவுக்கு எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பிரச்சனையை தீர்க்க, பிரிட்டன் அரசு இராணுவத்தை களமிறக்கியுள்ளது.
ஏதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி சாரதிகளை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களிடம் பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.