2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கடந்த ஜூலை மாதம் பாரியளவில் நாட்டில் போராட்டங்கள் வெடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.