தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.